Wednesday, January 28, 2009

இன்றோடு என் இளமை இன்னும் முதுமையானது..

யோசித்த நொடிகள் வரிகள் ஆனது..

யாஷித்த வாழ்க்கை கரைந்து போனது..

இப்போது என் வயது பதினாறிலிருந்து பதினேலானது..!!

வாழ்த்தியவருக்கு நன்றி, மறந்தவருக்கும் நன்றி..

உங்கள் வாழ்த்துக்கள் என் வாழ்க்கையின் வர்ணங்கள்..!!

உங்கள் மறதிகள் அந்த வர்ணங்களின் மிச்சங்கள்..!!

கனவில் வருகின்ற மலரே..
என் மனதின் ஒற்றை உறவே..
உன் கருவென வைத்தாய் எனையே..
என் உருவுக்குள் உந்தன் உயிரே..
வாசலில் விழுந்த மழையே..
தெரு ஓரத்தில் நிற்கும் சிலையே..
சிறு தாமரை இதழின் நிறமே..
தூரத்து புயலின் குளிரே..
பரதேசத்துநகரின் பனியே..
எனை யோசிக்க வைத்த ரதியே..
உனை நினைத்தே எழுதினேன் இதையே..!!

(என்னவளை நினைத்து எழுதியது இது..!!)

Saturday, January 24, 2009

நினைவெல்லாம் நீ, மலருக்குள் தேன்,
நித்தம் நீ கொடுத்த முத்தம் மகாராந்தமடி எனக்கு..
நிதம் நான் தின்ற உன் கன்னம் இனிக்குதடி..
நனைகின்ற குடையின் கீழே, நனையாத நான்..
என்னோடு நீ..!! என எண்ணிக்கொள்கிறேன்..!!

இன்று பெய்த மழையில் நனைந்ததால் வந்த வரிகள்..!!

Sunday, January 18, 2009

சற்றேறக்குறைய
சரியான
கவிதை எழுத
நினைக்கயில்
வந்து விழுந்த
தவறான கவிதை இது..!! :)

Friday, January 16, 2009

கண்மூடி திறக்கும் முன்னே கற்பழிக்கப்பட்ட சூழ்நிலை

விடியும் என்று காத்திருந்த என் கனவுகள்

இரவோடு இரவாய் கொலைசெய்யப்பட்டன

கோட்டை காட்டிய மனது யோசித்து முடியு செய்தது

ரயில் வேண்டாம் பஸ்ஸில் போகலாம் என்று..!!

இந்த வரிகள், ரயில் டிக்கெட் - ஆன்லைன்-ல பண்ணாம பூகிங் ஆபீஸ்-ல புக் பண்றது எவ்ளோ கஷ்டம்னுசொல்றதுக்கு..!!

Thursday, January 15, 2009

தாவணி இல்லை, சேலை இல்லை
சூரியன் இல்லை, நிலவும் இல்லை,
விடியல் இல்லை, அந்தியும் இல்லை,
குளியல் இல்லை, ஈரக்கூந்தல் இல்லை,
கவிதை வரவில்லை..!!

போர்த்திக்கொண்டு அலையும் பெண்கள் இங்கே
போரடிக்கும் வாழ்க்கை இங்கே
மக்கா பொத்திட்டு இரு அங்கே..!!

:)

இந்த பாடலின் முதல் வரியை கேட்டவுடனே இந்த ப்லோக்-இல் எழுத வேண்டுமென தோணிச்சு.. அதான் எழுதிட்டேன்.. (அதாவது இந்த ப்லோக் எழுத ஆரம்பிக்கும் போதுதான் இந்த பாட்டு கேட்டேன், எழுதிட்டேன்)

பாடல்: நான் கடவுள்..!!

பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
யாம் ஒரு பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும் எலும்போடு சதைநரம்புஉதிரமமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும் எலும்போடு சதைநரம்புஉதிரமமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா? இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா? இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா

இம்மையை நான் அறியாததா? இம்மையை நான் அறியாததா?
சிறு பம்மையின் நிழலில் உண்மையை உணர்ந்திட
பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் soஊத்திரமோ அது உன்னிடத்தில்,
ஒருமுறையா? இருமுரையா? பலமுறை பலபிறப்பு எடுக்க வைத்தாய்
புதுவினையா பலவினையா? கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே..
உன் அருள் அருள் அருளென்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே..
அருள் விழியால் நோக்குவாய்.. மலர்பதத்தால் தாங்குவாய்..
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற
பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும் எலும்போடு சதைநரம்புஉதிரமமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே..!!

Tuesday, January 13, 2009

#
சட்டென்று யோசித்ததில் சரியென்றே பட்டது..
கவிஞன் ஆக வேண்டும் என்றால் கவிதை எழுத வேண்டுமென்று..!!


#
கட்டிவைத்த கைகள்
கணினியுடன் தொடைகள்
இன்னிசையில் காதுகள்
உறக்கத்தில் விழிகள்
யோசனையின் துளிகள்.. இந்த கவிதை..!!

#
சூரியன் இல்லாத வெளிச்சத்தில் சுகம் கண்ட எனக்கு..
சூரியன் இல்லாமலும் வீசும் வெக்கை பகையாகிவிடுமோ??
சானாலானா-விலிருந்து சென்னை..!!


#
படுத்திருக்கும் பொழுதில் விழித்திருக்கும் எனக்கு,
கட்டியணைத்த நீயும் நினைவுக்கு வரவில்லை,
கன்னத்தில் முத்தமிட்ட அவளும் நினைவுக்கு வரவில்லை,
எழுந்திருக்கும் பொழுதில் இருந்து இருட்டும் வரை நடக்கும்
மீட்டிங்-இம், மிச்சம்முள்ள ப்ராஜெக்ட் வேலையும் நினைவுக்கு வந்து அறைந்து செல்கின்றன. வளராத/மலராத பூக்களும், வரையாத ஓவியமும், விழாத மழைத்துளியும், இன்னிசையோடு என்னுள் இறங்கி கொண்டிருக்கிறது இப்போது. விண்ணை எட்ட நான் முட்டி மோதிக்கொண்டிருகிறேன், இப்போதைக்கு நாளை காலைக்கு அலாரம் வைத்துக்கொண்டிருக்கிறேன்..!!
வாழ்க வளமுடன்..!!

பொங்கலில் சிந்திய பற்களை எண்ணிப்பார்க்க நேரமில்லை..
இந்த திங்களின் காலையில் தின்றது நினைவில் இல்லை..
மற்ற பூக்களின் மகாரந்தம் தெரியவில்லை..
வந்து உக்கார்ந்த வண்டுகள் சொல்லவில்லை..
வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை..
கிடைத்த பொழுது நெட்வொர்க் இல்லை..
அன்பே/நண்பனே உன்னிடம் இப்போ சொல்ல விட்டால் என்ன..
நாளை சொல்கிறேன்..
பொங்கலுடன் கரும்பு தின்னும் உனக்கும் உன் மாட்டுக்கும், மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!!