Tuesday, December 30, 2008

மறந்துபோன வார்த்தைகள் சிலநேரம் தும்மலைபோல நினைவுக்கு வந்து மறுபடியும் மறந்து போகும், அப்படியானதுதான் நான், நீ, நீங்கள் கல்லூரியின் முதல் நாள் என்ன செய்தோம் என்ற நினைவுகள் மறந்து போகும். நானோ நீங்களோ சத்தியமா ஒன்னும் உருப்படியா பண்ணியிருக்க மாட்டோம். கடைசி நாளும் கிட்டத்தட்ட அப்படிதான் சில கண்ணீர் துளிகள் சில கடைசி சொற்கள் சில வருத்தங்கள் சில வார்த்தைகள் சில செண்டிமெண்டுகள் இவற்றுடன் பிரிவுகள், நீண்ட நாட்களாய் வாழ்ந்ததில் நிதம் வர்ணங்கள் எத்தனை விடியல்கள் எத்தனை பௌர்ணமி எத்தனை பரதேசம் எத்தனை பாவங்கள் எத்தனை பாடங்கள் எத்தனை சிறிதாய் செய்த நன்மைகள் எத்தனை?

எழுதுவதாய்நினைத்து தொடங்கிய இது முடிவிலாமல் முடிவடைகிறது..!!

Monday, December 29, 2008

பகலுக்காக காத்திருக்கும் பூவல்ல நாங்கள்,

இரவிற்காக விழித்திருக்கும் கூகை அல்ல நாங்கள்,

நீருக்காக நின்றிருக்கும் நெற்கள் அல்ல நாங்கள்,

போருக்காக பயந்திருக்கும் கோழையல்ல நாங்கள்,

மழையோடு மறந்து போகும் குடையும் அல்ல நாங்கள்,

வெயிலோடு கூட வரும் வியர்வை அல்ல நாங்கள்,

தினம் ஒவ்வொன்றாய் பொருக்கி தின்னும் குருவி அல்ல நாங்கள்,

விழித்திருக்கும் பொழுதுகளில் தூக்கமின்மை பேசுவோம்,

தூங்க வேண்டிய பொழுதுகளில் விழித்திருந்து பேசுவோம்,

வெட்டிக்கதை பேசியே தப்புதப்பாய் "CODE" செய்யவோம்,

திருந்தாத உலகமென மெய்ய்யுலகை பொய் என்போம்,

பொய் உலகில் வாழ்ந்து கொண்டே மெய் பறந்து ஆடிடுவோம்..!!

- உலகில் எதுவுமே நிலையில்லை, நாளைக்கே மார்க்கெட் சரிந்து நாமெல்லாம் தெருவோரம் நடக்கலாம், நிஜ வாழ்வின் இன்ப துன்பங்களை நேரினில் சந்தித்து உரையாடலாம்..!!

Friday, December 26, 2008


மலரோடு மலரவேண்டும்,
தினம் பனியோடு
பேச வேண்டும்,
அதிகாலை நடக்கையில்,
சில்லென்று தென்றல் வேண்டும்,
கடலோர காற்றோடு,
மனதார பேச வேண்டும்,
பள்ளி செல்லும் பிள்ளையோடு,
பள்ளிவரை செல்லவேண்டும்,
பள்ளிகூட வாசலில்,
எச்சிலோடு முத்தம் வேண்டும்,
மிச்சமுள்ள எச்சிலோடு,
வீடு வரை செல்ல வேண்டும்,
கதவடைத்து
அவளை கட்டியணைக்க வேண்டும்,
சிரித்த முகத்தோடு,
வாழ்க்கை வேண்டும்,
மறந்த துன்பத்தின்,
அனுபவங்கள் வேண்டும்,
அனுபவம்மிக்க பெற்றோரை,
அரவணைக்க வேண்டும்,
வலிமைமிக்க நட்பை,
வலுப்படுத்த வேண்டும்,
தெருவோர மரத்தில்,
சற்றே நிழல் காய வேண்டும்,
விழியோர வேர்வை,
துவர்ப்பாக வேண்டும்,
துடிப்பான என் இளமை,
பயன்பட வேண்டும்,
வளர்ந்த நாட்டின்,
குடிமகனாக வேண்டும்,
வளரும் நாட்டுக்கு,
கைகொடுக்க வேண்டும்,
எப்போதும் என் மனதில்,
கவிதை வர வேண்டும்,
இப்போதாவது இந்த கவிதை,
எல்லாருக்கும் புரிய வேண்டும்.

புரியும் என்ற நம்பிக்கையில் நான் தூங்க வேண்டும்,
புரியாத நீங்கள் என்னை திட்ட வேண்டும்..!!


எதையும் நினைத்து எழுதவில்லை, எழுதும்போது நினைத்ததை எழுதியுள்ளேன்..!!

Tuesday, December 23, 2008


சுட்டுவிடும் நெருப்பை முத்தமிடும் நண்பனே
நெருப்பு உன்னை முத்தமிடும் முன்
நாம் செய்தாக வேண்டிய சாதாரணங்கள் இதோ:
மனைவிக்கு முத்தங்கள்.. (காதலி எப்படியும் மனைவி ஆவாள் என்ற நம்பிக்கையில் தனியாக சேர்க்கவில்லை, கள்ளகாதலி இருப்பவர்கள் மன்னிக்கவும்)
தந்தைக்கு நேசம்..
தாய்க்கு பாசம்..
வண்டிக்கு பெட்ரோல்..
மனதிற்கு நிம்மதி..
மகளுக்கு செல்லம்..
மகனுக்கு சிந்தனை..
வீட்டுக்கு வாடகை..
நட்புக்கு மரியாதை..
உறவுக்கு உபசரிப்பு..
கடனுக்கு வட்டி..

இவை எல்லாம் செய்வோமோ இல்லயோ..
வீட்டுக்கு ஒரு மரம்..
வீட்டுக்கு ஒரு மனிதம் வளர்ப்போமாக..!!
மனிதத்திடம் தீவிரதம் வேண்டாம் என சொல்வோமாக..!!

Life is one, enjoy with smile.. :)

Sunday, December 21, 2008


எதப்பத்தி எழுதலாம்ன்னு நினைச்சுட்டு இருக்கும்போது ஏதாவது எழுதலாம்ன்னு தோனுச்சு, சரி ஏதாவது எழுதலாம்ன்னு நினைகிரப்போ எதப்பத்தி எழுதலாம்ன்னு தோனமாட்டேன்குது.
கொஞ்ச நாளா ரொம்ப நடக்கிற குண்டுவெடிப்புகள்..
ரொம்ப நாளா நடக்குற தீவிரவாதம்..
மறந்து போன மனிதம்.. மருதுபோன வலிகள்..
பக்கத்து நாட்டு பிரச்சனை.. பகை நாட்டு சோகம்..
இதனையும் விட்டாலும் நண்பா சொந்தபொலம்பல்கள் பேசி, தண்ணி அடிகிரவனுங்கள உசுபேத்தி கூட உக்கந்து சிப்ஸ் சாப்டுட்டே படம் பார்த்துட்டு மறுநாள் காலைல வாக்கிங் போகனும்னு சபதம் எடுத்துட்டு மதியானம்போல எந்திருச்சு பல்விலக்காம எங்காவது SP டீ குடிச்சுட்டு (toilet poradha marandhutteno?) நைட் ஷோவ்க்கு பிளான் பன்னுவோமே அத எழுதவா?

இலான உக்காந்து உக்கந்து டூர் பிளான் பண்ணிட்டு கடைசில சொதப்புவேமே அத எழுதவா? ஐஸ் ஏஜ் பார்த்துட்டு ஜாவா அண்ட் பிள்ளயார ஒட்டுவேமே அத எழுதவா? பீவீயின் உறக்கமா மேட்டெரின் MATTERa? Koசுமுட்டயின் இம்சையா?
பவுடர் அடிச்ச பண்ணிகுட்டியின் thanga முடியாத பாட்டுவரிகளா?
எதாவது ஒன்ன யோசிச்சு கண்டிப்பா எழுதனும்னு இருக்கேன்சீக்கிரமா எழுதுவேன். கொஞ்சம் ஜாலி ஆரம்பிச்சாலும் நாமெல்லாம் சீரிசான சில 'TOPICS' எழுதி ஏதாவதொரு வழியில் நல்லதை பரப்ப வேண்டுமென விரும்பும் உங்கள் நண்பன் கபம்(kabamgradhu vera onnum illa, KBM apdiye tamil font-la maathuna ipdi aaayuduchu)..

Labels:



மக்காசோளம் பாலில் ஊற வைத்து,
முந்திரியை காயவைத்து,
வரட்டிய சுட வைத்து,
வெண்ணையை வெட்டி எடுத்து,
தக்காளியை தண்ணியை தொட்டுக்க வைத்து,
குளிரோடு குழிkka வைத்து,
அலுவலகம் போக வைத்து,
பனியில் படுக்க வைத்து,
உயிரை சென்னையில் இருக்க வைத்து,
தனியே சிர்ரிக்க வைத்து,
தன்னதனியே படுக்க வைக்கும் பணமே,
கொஞ்சம் சமதர்ம முடிவுக்கு வருவாயா,
எங்களை ஊரோடு உறவாட வைப்பாயா?

உலகெல்லாம் பணம் மதிப்பு ஒரே மாதிரி இருந்தால் எனகென்னவோ உறவும் பாசமும் கூடுமென தோன்றியதால் எழுதியது..!! இந்தியாவிலும் இங்கிலாந்திலும் இத்தாலியிலும் பணம் ஒரே மதிப்பாக இறந்தால் நான் என் குடும்பத்தையும் நீங்கள் உங்கள் குடும்பத்தையும் பிரிந்த வேண்டாம்தானே?
என்ன நான்சொல்றதுசரிதானே?


விழிகளில் துளிகள்,
வலிகளில் துளிகள்,
மனைவியின் அன்பினில்
கரைந்த நொடிகள்
தேடியும் கிடைக்கவில்லை,
கிடைத்ததெல்லாம் தனிமை,
தவிர்க்க முடியாத தனிமை.

அவள் விரலோரம் மோதிரம்,
என் கையோடு கேமரா,
ஒரு சின்ன காரோடு வீடு,
மடியோடு லேப்டாப்,
காதோரம் பாடுகாளி,
கினரோடு ஒரு தோப்பு,
இவைஎல்லாம் இருக்கையில்,
மனதோடு நான் வாழ,
மலரோடு அவள் வாழ,
மகிழ்வான வாழ்க்கைக்கு
நான் இங்கே அவள் அங்கே..!!

எங்கோ ஸ்டார்ட் ஆகி எங்கோ முடிந்த இந்த kavidhai என்னும் வரிகள், என்னவளை நினைத்துக்கொண்டே எழுதியது..!!

Saturday, December 20, 2008

இறந்துபோன வார்த்தைகளை
நினைவு படுத்தி எழுதுகிறேன்
வறண்டு போன பூமியில்
இருண்டுபோன மேகங்கள்
மறந்துபோன மழைத்துளியை
எடுத்துவந்து தருகிறேன்..!!
மக்கா என்னோடு வா உலகை விலை பேசலாம்..!!

Sunday, December 07, 2008

நீண்ட நாள்களாக தமிழில் ப்லோக் எழுத வேடுமேனு நினைத்த எனக்கு, இன்றுதான் வாய்ப்பு கிடைத்தது. இனிமேல் பின்னி பிடல் எடுதுட வேண்டியதுதான். இனிமேல் இந்த கோயலியானின் சேட்டைகள், ரசனைகள், ஆசைகள், வருத்தங்கள், விளம்பரங்கள், உணர்ச்சிகள் உங்களுடன் பகிர்ந்தளிகப்டும்- - - - என்றும் நட்புடன் KBM.