Friday, December 26, 2008


மலரோடு மலரவேண்டும்,
தினம் பனியோடு
பேச வேண்டும்,
அதிகாலை நடக்கையில்,
சில்லென்று தென்றல் வேண்டும்,
கடலோர காற்றோடு,
மனதார பேச வேண்டும்,
பள்ளி செல்லும் பிள்ளையோடு,
பள்ளிவரை செல்லவேண்டும்,
பள்ளிகூட வாசலில்,
எச்சிலோடு முத்தம் வேண்டும்,
மிச்சமுள்ள எச்சிலோடு,
வீடு வரை செல்ல வேண்டும்,
கதவடைத்து
அவளை கட்டியணைக்க வேண்டும்,
சிரித்த முகத்தோடு,
வாழ்க்கை வேண்டும்,
மறந்த துன்பத்தின்,
அனுபவங்கள் வேண்டும்,
அனுபவம்மிக்க பெற்றோரை,
அரவணைக்க வேண்டும்,
வலிமைமிக்க நட்பை,
வலுப்படுத்த வேண்டும்,
தெருவோர மரத்தில்,
சற்றே நிழல் காய வேண்டும்,
விழியோர வேர்வை,
துவர்ப்பாக வேண்டும்,
துடிப்பான என் இளமை,
பயன்பட வேண்டும்,
வளர்ந்த நாட்டின்,
குடிமகனாக வேண்டும்,
வளரும் நாட்டுக்கு,
கைகொடுக்க வேண்டும்,
எப்போதும் என் மனதில்,
கவிதை வர வேண்டும்,
இப்போதாவது இந்த கவிதை,
எல்லாருக்கும் புரிய வேண்டும்.

புரியும் என்ற நம்பிக்கையில் நான் தூங்க வேண்டும்,
புரியாத நீங்கள் என்னை திட்ட வேண்டும்..!!


எதையும் நினைத்து எழுதவில்லை, எழுதும்போது நினைத்ததை எழுதியுள்ளேன்..!!

2 Comments:

At 1/06/2009 9:33 AM , Anonymous Anonymous said...

Nalla Kavithai ...Unnai Nandrahave
thittiyum vittein ......

Purinja madhiri irrukku ....aana konjam puriyalla

-Suganya

 
At 1/18/2009 6:21 AM , Blogger Indumathi Prasanna said...

Super a iruku..epadi kavithai eluthuvinga nu solala..
alaga eluthi irukinga..nala varthaigal...

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home