Saturday, July 09, 2016

பத்தாண்டு தீராக் காதலில்

என்னவளே..
விழி பார்த்தபோது சிரித்தாய்,
மொழி பேசும்போதும் சிரித்தாய்,
அக்னி சுற்றிய சூட்டோடு (இன்னும்) நான்,
அன்று(றே) சூடிய மலராய் நீ..!! 
காதலி நீ, 
தீராக் காதலில் நான்..!!
உயிரே, உன்னோடு சேர்ந்து இன்றோடு பத்தாண்டு..!!
பாரதி சொன்ன...
காதல் அடி நீ எனக்கு, காந்தம் அடி நான் உனக்கு,
வேதம் அடி நீ எனக்கு, வித்தை அடி நான் உனக்கு,
போத முற்ற போதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே.
நாதவடிவானவளே நல் உயிரே கண்ணம்மா..!!


Wednesday, December 30, 2015

பசியளவு

தின்னாத மிச்சங்கள் குப்பையிலே..
தின்னாத அவர்களும் அருகினிலே..
பலரோட பசியோ வயிறளவு..
சிலரோட வாழ்வே பசியளவு..!!

 

மரம்..!!


மலை ஓரத்தில் இழை மேகத்தில்,
நடந்து சென்றது எறும்பு,
நிழலில் என் மக்கள்..!!

Saturday, June 04, 2011

தாய் தின்ற மண்ணே... பாடல் from ஆயிரத்தில் ஒருவன்..

தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

நெல்லாடிய நிலம் எங்கே
சொல்லாடிய அவை எங்கே
வில்லாடிய களம் எங்கே
கல்லாடிய சிலை எங்கே

தாம்திக்க திக்கதக்க
தாம் திரனன தாம்
திருக்க தக்க தாம்

கயல் விளையாடிடும் வயல்வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்..
காவேரி மலரின் கடிமணம் தேடி
கருகி முடிந்தன நாசி..
சிலை வடிவே உன் உளி ஒழி தேடி
திருகி விழுந்தன செவிகள்..
ஊன் பொதி சோற்றின் தேன்சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்..
புலி கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலி கரி பொரிப்பதுவோ.. ஓஓஓஒ..
காற்றை குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ..ஓஓஓ..
மண்டைவோடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ..மன்னன் ஆளுவதோ..

தாய் தின்ற மண்ணே...

நொறுங்கும் உடல்கள்..
பிதுங்கும் உயிர்கள்..
அழுகும் நாடு..
அழுகின்ற அரசன்..
பழம் தின்னும் கிளியோ..
பிணம் தின்னும் கழுகோ..
தூதோ முன்வினை தீதோ..
கலங்களும் அதிர..
களிறுகள் பிளிற..
சோழம் அழைத்து போவாயோ..
தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்..
புரவிகள் போலே புரண்டிருப்போம்..
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அதுவரை.. அதுவரை.. ஓஓஓஓஒ......

தமிழன் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோலே, அழாதே..
என்றோ ஒருநாள் விடியும் என்று
இரவை சுமத்தும் நாளே, அழாதே..
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உரையில் தூங்கும் வாளே, அழாதே..
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடு அழுகும் யாழே, அழாதே..

Friday, July 09, 2010

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்..
இந்த இடத்த வளச்சு போட்ரலாமா என்று..

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தான் கர்ணன்..
என் வீட்டு லோன் அடைக்க(போட) எங்க போய் சேரனுமோ..??

கடன் நட்பை முறிக்கும்..
மச்சான் ஒரு நிமிஷம் Credit Card கொடுடா..!!

Saturday, February 20, 2010

நடப்பவை..

சிற்றின்ப களிப்பினில்..
கழிவறைகள்,
கர்ப்பப்பைகள்..!!

Wednesday, October 28, 2009

மனிதம்..!!

வெந்து சுவைந்த பறவையின் உயிர்கள்

வேர்த்து சுவைக்கும் மனிதத்திற்காக

கொல்லப்படுகின்றன

எனினும் மனித வளர்ப்போம்..!!

Friday, October 23, 2009

யதார்த்தம்..!!

ஏரிக்கரையில் நின்றிருந்த
பேருந்தின் ஜன்னலில்
விமானத்தில் பயணப்பட்ட
மாலுமி பூ வாங்கிகொண்டிருந்தான்
மனைவி பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள்.

திசைமாறிய இலக்கு

விடியலை நோக்கி
ஓடிவெண்ணிலவில் மோதி விழுந்த
விண்மீன் நான்
எதிரே சூரியன்.

சேவை..!


என் கைகடிகாரத்தை பார்த்த கண்களின் மூளைக்கு,

வேலை தரப்படுகின்றன, உடனே தன் கடிகாரத்தை பார்ப்பதர்ற்கு

14 நிமிட முன்னேற்றம்..!!

கடவுள்கள் வீடு வாங்குகிறார்கள்,
கடவுள்கள் காதலிக்கிறார்கள்,
கடவுள்கள் பொய் பேசுகிறார்கள்,
கடவுள்கள் மூன்று வேலையும் சாப்பிடுகிறார்கள்,
கடவுள்கள் வேலை தேடுகிறார்கள்,
கடவுள்கள் இரவில் கனவு காண்கிறார்கள்,
கடவுள்கள் தினமும் பயணிக்கிறார்கள்,
கடவுள்கள் இடைவேளையில் ஈழம் பேசுகிறார்கள்,
கடவுள்கள் பாட்டு கேட்கிறார்கள்,
சில கடவுள்கள் கவிதை படிக்கிறார்கள்,
நீங்களும் கடவுளென்ற நினைவோடு,
தீபாவளி வாழ்த்துக்கள்.
-- நான் கடவுள்.