Saturday, June 04, 2011

தாய் தின்ற மண்ணே... பாடல் from ஆயிரத்தில் ஒருவன்..

தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

நெல்லாடிய நிலம் எங்கே
சொல்லாடிய அவை எங்கே
வில்லாடிய களம் எங்கே
கல்லாடிய சிலை எங்கே

தாம்திக்க திக்கதக்க
தாம் திரனன தாம்
திருக்க தக்க தாம்

கயல் விளையாடிடும் வயல்வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்..
காவேரி மலரின் கடிமணம் தேடி
கருகி முடிந்தன நாசி..
சிலை வடிவே உன் உளி ஒழி தேடி
திருகி விழுந்தன செவிகள்..
ஊன் பொதி சோற்றின் தேன்சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்..
புலி கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலி கரி பொரிப்பதுவோ.. ஓஓஓஒ..
காற்றை குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ..ஓஓஓ..
மண்டைவோடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ..மன்னன் ஆளுவதோ..

தாய் தின்ற மண்ணே...

நொறுங்கும் உடல்கள்..
பிதுங்கும் உயிர்கள்..
அழுகும் நாடு..
அழுகின்ற அரசன்..
பழம் தின்னும் கிளியோ..
பிணம் தின்னும் கழுகோ..
தூதோ முன்வினை தீதோ..
கலங்களும் அதிர..
களிறுகள் பிளிற..
சோழம் அழைத்து போவாயோ..
தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்..
புரவிகள் போலே புரண்டிருப்போம்..
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அதுவரை.. அதுவரை.. ஓஓஓஓஒ......

தமிழன் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோலே, அழாதே..
என்றோ ஒருநாள் விடியும் என்று
இரவை சுமத்தும் நாளே, அழாதே..
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உரையில் தூங்கும் வாளே, அழாதே..
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடு அழுகும் யாழே, அழாதே..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home