Tuesday, January 13, 2009

#
சட்டென்று யோசித்ததில் சரியென்றே பட்டது..
கவிஞன் ஆக வேண்டும் என்றால் கவிதை எழுத வேண்டுமென்று..!!


#
கட்டிவைத்த கைகள்
கணினியுடன் தொடைகள்
இன்னிசையில் காதுகள்
உறக்கத்தில் விழிகள்
யோசனையின் துளிகள்.. இந்த கவிதை..!!

#
சூரியன் இல்லாத வெளிச்சத்தில் சுகம் கண்ட எனக்கு..
சூரியன் இல்லாமலும் வீசும் வெக்கை பகையாகிவிடுமோ??
சானாலானா-விலிருந்து சென்னை..!!


#
படுத்திருக்கும் பொழுதில் விழித்திருக்கும் எனக்கு,
கட்டியணைத்த நீயும் நினைவுக்கு வரவில்லை,
கன்னத்தில் முத்தமிட்ட அவளும் நினைவுக்கு வரவில்லை,
எழுந்திருக்கும் பொழுதில் இருந்து இருட்டும் வரை நடக்கும்
மீட்டிங்-இம், மிச்சம்முள்ள ப்ராஜெக்ட் வேலையும் நினைவுக்கு வந்து அறைந்து செல்கின்றன. வளராத/மலராத பூக்களும், வரையாத ஓவியமும், விழாத மழைத்துளியும், இன்னிசையோடு என்னுள் இறங்கி கொண்டிருக்கிறது இப்போது. விண்ணை எட்ட நான் முட்டி மோதிக்கொண்டிருகிறேன், இப்போதைக்கு நாளை காலைக்கு அலாரம் வைத்துக்கொண்டிருக்கிறேன்..!!
வாழ்க வளமுடன்..!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home