Thursday, January 15, 2009

இந்த பாடலின் முதல் வரியை கேட்டவுடனே இந்த ப்லோக்-இல் எழுத வேண்டுமென தோணிச்சு.. அதான் எழுதிட்டேன்.. (அதாவது இந்த ப்லோக் எழுத ஆரம்பிக்கும் போதுதான் இந்த பாட்டு கேட்டேன், எழுதிட்டேன்)

பாடல்: நான் கடவுள்..!!

பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
யாம் ஒரு பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும் எலும்போடு சதைநரம்புஉதிரமமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும் எலும்போடு சதைநரம்புஉதிரமமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா? இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா? இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா

இம்மையை நான் அறியாததா? இம்மையை நான் அறியாததா?
சிறு பம்மையின் நிழலில் உண்மையை உணர்ந்திட
பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் soஊத்திரமோ அது உன்னிடத்தில்,
ஒருமுறையா? இருமுரையா? பலமுறை பலபிறப்பு எடுக்க வைத்தாய்
புதுவினையா பலவினையா? கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே..
உன் அருள் அருள் அருளென்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே..
அருள் விழியால் நோக்குவாய்.. மலர்பதத்தால் தாங்குவாய்..
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற
பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும் எலும்போடு சதைநரம்புஉதிரமமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சைபாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே..!!

1 Comments:

At 1/28/2009 9:03 AM , Blogger Prem said...

nalla kavidhai ku naduvula ippadi oru mokkai ya potuteengalae?

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home